கசான், மே 16 - ரஷ்யாவுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு நேற்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
அனைத்துலக அளவில் ஆற்றிய பங்களிப்பையும் அவரின் தலைமைத்துவ ஆற்றலையும் அங்கீகரிக்கும் வண்ணம் அந்த கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
4 நாள் பயணத்தில் தலைநகர் மாஸ்கோவில் அவர் பங்கேற்கும் கடைசி நிகழ்வு இதுவாகும்.
பின்னர் அவர் ரஷ்யாவில் அமைந்துள்ள கசான் நகருக்குச் சென்றுள்ளார்.
ஹலால் சான்றிதழ், விவசாயத் தொழில்நுட்படம், இஸ்லாமிய நிதியியல் மற்றும் கல்வி தொடர்பான கலந்துரையாடல்களிலும் அன்வார் கலந்துகொண்டார்.


