கோலாலம்பூர், மே 16 - PLKN 3.0 தேசிய சேவைப் பயிற்சியின் இரண்டாவது தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தத்தம் முகாம்களில் இன்று நண்பகல் 12 மணிக்குள்ளாக பதிந்துக் கொள்ள வேண்டும்.
எனவே, மருத்துவ விடுப்பு போன்ற உரியக் காரணங்களின்றி பதியத் தவறுவோர், உத்தரவை மீறியதாகக் கருதப்படுவர்.
தேசிய சேவைப் பயிற்சி சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என தேசிய சேவைப் பயிற்சி துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விதியை மீறியவர்களுக்கு அதிகபட்சம் 3,000 ரிங்கிட் அபராதமும் 6 மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
மே 11 முதல் ஜூன் 24 வரையில் 45 நாட்களுக்கு நடைபெறும் PLKN பயிற்சியில் 200 பெண்கள் உட்பட மொத்தம் 550 பேர் பங்கேற்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


