கோலாலம்பூர், மே 16: அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த 2024-2025 உலக சாம்பியன்ஷிப்பில் ஸ்குவாஷ் காலிறுதிப் போட்டியில் உள்நாட்டுப் பிரதிநிதி ஒலிவியா வீவரிடம் 1-3 என்ற கணக்கில் எஸ். சிவசங்கரி தோல்வியடைந்த
41 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் நான்காவது இடத்தில் இருந்த வீவர், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி சிவசங்கரியை 11-3, 8-11, 11-4, 11-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஏழு முறை உலக சாம்பியனான எகிப்தின் நூர் எல் ஷெர்பினியை அரையிறுதியில் வீவர் எதிர்கொள்ள உள்ளார்.
கடந்த மே 13 அன்று இப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான எகிப்தின் மொஸ்டபா அசாலிடம் 0-3 என்ற கணக்கில் தேசிய ஆண் விளையாட்டாளர் இங் ஐன் யோவும் 4-11, 6-11, 7-11 என்ற கணக்கில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
— பெர்னாமா


