நஜாப், ஈராக், மே 15 - ஈராக் நஜாப் நகரில், 55 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர், தான் வளர்த்த சிங்கத்தால் தாக்கப்பட்டு இறந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்நபர் பல ஆண்டுகளாக சிங்கங்கள் மற்றும் பிற காட்டு விலங்குகளைச் செல்லப் பிராணிகளாக வளர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தான் வளர்த்து வந்த சிங்கங்களில் ஒன்றால், அவர் கொடூரமாக தாக்கப்பட்டு இறந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த அண்டை வீட்டார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அச்சிங்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் சுட்டு கொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தை தொடர்ந்து, சட்டவிரோதமாக வனவிலங்குகளைச் செல்ல பிராணிகளாக வளர்ப்பதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று உள்ளூர் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


