புத்ராஜெயா, மே 15 - நாட்டில் பிறப்பு விகிதம் கடந்தாண்டை விட இவ்வாண்டின் முதல் காலாண்டில் 11.5 விழுக்காடு குறைந்துள்ளது.
கடந்தாண்டு முதல் காலாண்டில் 105,613ஆக பதிவாகியிருந்த எண்ணிக்கை இந்த ஆண்டு அதே காலக்கட்டத்தில் 93,500ஆக குறைந்துள்ளது.
பிறப்பு விகிதம் ஒவ்வொரு 100 பெண் குழந்தைகளுக்கும் 106 ஆண் குழந்தைகள் என பதிவாகியுள்ளதாக தேசியப் புள்ளிவிவரத் துறை கூறியது.
இனவாரியாகப் பார்த்தால், 68.8 விழுக்காடு பிறப்பு விகிதம் மலாய்க்காரர்களை உட்படுத்தியதாகும். மேலும், சீனர்கள் 8.6 விழுக்காடாகவும் இந்தியர்கள் 3.8 விழுக்காடாவும் உள்ளனர்.
கடந்தாண்டின் முதல் காலாண்டு உடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு சீனர்கள் மற்றும் இந்தியர்களின் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது.
சீனர்கள் 1 விழுக்காடும் இந்தியர்கள் 0.4 விழுகாடும் சரிவைப் பதிவுச் செய்துள்ளனர்.


