சுங்கார், மே 15 - பெர்லிஸ் மாநிலத்தில் ஆகஸ்ட் 1 முதல் மின்னியல் சிகரெட் அல்லது வேப் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை வேப் புகைக்கும் பழக்கம் இளையோர் மத்தியில் தீங்கு விளைவிப்பதைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.
அம்மாநிலம் முழுவதும் சுமார் 50 வேப் கடைகளை இத்தடை உட்படுத்தியிருக்கும் என மந்திரி புசார் முகமட் ஷுக்ரி ரம்லி தெரிவித்தார்.
இத்தடை அமுலுக்கு வர சுமார் 3 மாதங்கள் இருப்பதால், வேப் கடை நடத்துநர்கள் இப்போதே வேறு வியாபாரத்திற்கு மாற தயாராகுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
பொருத்தமான வியாபாரத்தைத் தேர்ந்தெடுக்க மாநில அரசு அவர்களுக்கு போதிய ஆதரவை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குப் பிறகு வேப் பொருட்களை விற்பனை செய்யும் வணிக வளாகங்களுக்கு எதிராக பிபிடி கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் விளக்கினார்.


