கோலாலம்பூர், மே 14 - இம்மாதம் 18-ஆம் தேதி அனுசரிக்கப்படும் அனைத்துலக அருங்காட்சியகம் தினத்தை முன்னிட்டு மலேசிய அருங்காட்சியகத் துறை.ஜே.எம்.எம்-இன் கீழ் உள்ள 19 அருங்காட்சியங்கள் பொதுமக்களுக்கு இலவசமாக திறக்கப்படவுள்ளன.
மேலும், தேசிய அருங்காட்சியகம், சிப்பாங்கில் உள்ள தேசிய கார் உற்பத்தி அருங்காட்சியகம், லெம்பா பூஜாங்கில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் மலாக்காவில் உள்ள மலேசிய கட்டிடக்கலை அருங்காட்சியகம் அதில் அடங்கும் என்று தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் கூறினார்.
இதன் மூலம், மலேசியாவின் அடையாளத்தின் மையமாக இருக்கும் வளமான வரலாறு, கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையின் உணர்வை ஆராய்வதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆரோன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவின் மூலம் பொதுமக்களுக்கு வலியுறுத்தினார்.
அதுமட்டுமில்லாம்ல், ஒற்றுமை மற்றும் வரலாற்றின் மூலம் மக்களை இணைக்கும் இடமாக அருங்காட்சியங்கள் செயல்படுவதாக அவர் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, இலவசமாக திறக்கப்படும் அருங்காட்சியகங்களின் பட்டியலை தெரிந்து கொள்ள `NATIONAL MUSUEM KL` என்ற முகநூல் பக்கத்தை நாடவும்.
-பெர்னாமா


