காஜாங், மே 14 - காஜாங் கேரிங் ஹோம் மையத்தில் வசிக்கும் 25 மூத்த குடிமக்கள் அன்னையர் தினம் மற்றும் தந்தையர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒரு சிறப்புத் திட்டத்தின் மூலம் இலவச முடி திருத்தும் சேவையைப் பெற்றனர்.
இந்த திட்டம் அங்கு வசிப்பவர்களின் தியாகத்தை மதிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது என பாலகோங் சட்டமன்ற உறுப்பினர் ஓங் சுன் வெய் கூறினார்.
"அன்னையர் தினம் மற்றும் தந்தையர் தினத்தை முன்னிட்டு மூத்த குடிமக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த இலவசச் சேவை வழங்கப்பட்டது.
"இந்த நிகழ்ச்சிகான செலவை ஷல்லா ஹேர் அகாடமி முழுமையாக ஏற்றுகொண்டது. அந்நிறுவனம் ஹேர்கட் சேவைகளை வழங்க மூன்று பணியாளர்களை அனுப்பி வைத்தது," என்று நிகழ்ச்சியில் சந்தித்தபோது சுன் வெய் கூறினார்.
இதுபோன்ற ஒரு திட்டம் ஏற்பாடு செய்வது இது முதல் முறை அல்ல. ஆனால், அன்னையர் தினம் மற்றும் தந்தையர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும் என்று அவர் தெரிவித்தார்.


