உலு லங்காட் மே 14 - நேற்று மாலை வீசியப் புயல் காற்றினால் உலு லங்காட்டில் 13 வீடுகளும் 4 கடைகளும் சேதமுற்றன.
இச்சம்பவம் மாலை 6 மணிக்கு நிகழ்ந்ததாகக் கம்போங் பத்து 16இன் கிராமத் தலைவர் கூறினார். வீடுகள் சேதமடைந்தவர்கள் தற்காலிகமாக அண்டை வீடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
இதில் கம்போங் பத்து 16, டுசுன் துவா, கம்போங் கெனாங்கா, தாமான் டேசா செந்தோசா, கம்போங் புக்கிட் குண்டாங் மற்றும் கம்போங் தெங்கா ஆகிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பலத்த புயல் காற்றினால் 10 மரங்கள் வேரோடு சாய்ந்தன. எனினும், அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.
தற்போது, இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கைக் கணக்கிடப்பட்டு வருகிறது.


