கோலாலம்பூர்,மே 13 - நாட்டில் கட்டப்படும் அனைத்து புதிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளிலும் வனவிலங்குகள் சாலையை கடந்த செல்வதற்காக சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும் என்று பொதுப்பணி அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் நோக்கம் விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே ஆகும் என பொதுப்பணி அமைச்சு மேலும் கூறியது.
இந்நடவடிக்கை தைப்பிங் மற்றும் புருவாஸ் நெடுஞ்சாலையில் விலங்குகள் செல்வதற்கான சுரங்கப்பாதை நிர்மாணிப்பதன் மூலம் தொடங்கியது. இதற்கு வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டது என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், வனவிலங்கு பாதுகாப்பை உறுதி செய்ய வனவிலங்குத் துறையுடனான நெருங்கிய ஒத்துழைப்பு தொடரும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், வனவிலங்குகள் கடந்து செல்லும் பாதைகளில் ஓட்டுநர்கள் மிகவும் கவனமாக இருக்கவும், மெதுவாகச் செல்லவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


