கிரிக், மே 14 - பேராக்கில் கிரிக் நெடுஞ்சாலையில் ஆண் யானை குட்டி ஒன்று டிரேய்லர் லாரியால் மோதப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் எவ்வித கவனக்குறைவு அம்சங்களும் இல்லை என மாவட்டக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை 2.30 மணி அளவில் இச்சம்பவம் நிகழ்ந்த போது அப்பகுதி பனிமூட்டமாக இருந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாகக் கிரிக் காவல்துறை தலைவர் சூப்ரிடென்டண்ட் சுல்கிஃப்பிளி மஹ்மூட் கூறினார்.
மேலும், சம்பவ இடத்தில் போதிய விளக்கு ஒளி வெளிச்சமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
கடந்த ஞாயிற்று கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் கோழிகளை ஏற்றிச் சென்ற அந்த லாரி திடீரென குறுக்கே ஓடிய யானைக் குட்டியை மோதியுள்ளது. இதனால் லாரியின் அடியில் சிக்கி
யானை பரிதாபமாக உயிரிழந்தது.
குட்டியை இழந்த வேதனையில் தாய் யானை அதே இடத்தில் 5 மணி நேரங்களுக்கும் மேல் நகராமல் நின்றிருந்த வீடியோக்கள் வைரலாகி நாட்டையே உலுக்கின.


