மணிலா, மே 13 - இன்று அதிகாலை மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள ஓர் எரிமலை வெடித்தது. அந்த எரிமலை சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு அடர்த்தியான சாம்பலையும்,கற்களையும், மலை சரிவுகளைச் சுற்றி கக்கியது.
தென்கிழக்காசிய நாட்டில் இன்னும் செயல்பட்டுவரும் 24 எரிமலைகளில் ஒன்றான கன்லான் (Kanian ) எரிமலை, கடந்த நூற்றாண்டில் பல வெடிப்புகளைச் சந்தித்ததோடு கடந்த மாதமும் இத்தகைய வெடிப்பு ஏற்பட்டது.
இன்று அதிகாலை மணி 2.55க்கு கன்லான் எரிமலையின் உச்சிப் பள்ளத்தில் மிதமான வெடிப்பு ஏற்பட்டது என்று பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. ஐந்து நிமிடங்கள் வரை குமுறல் நீடிந்தது.
அந்த வெடிப்பு பெரிய சாம்பல் நிற புகைமூட்டத்தை உருவாக்கியதோடு, காற்றுமண்டலத்தில் சுமார் 3 கிலோமீட்டருக்கு மேல் உயர்ந்தது. பின்னர் புகைமூட்டம் மேற்கு நோக்கி நகர்ந்தது


