கோலாலம்பூர், மே 13 - இவ்வாண்டுக்கான தனது அடுத்த புதிய iPhone கைப்பேசிகளின் விலைகளை உயர்த்த Apple எண்ணியுள்ளது.
புதிய வரி விதிப்பால், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுக்கு இடையூறு ஏற்பட்டு, தனது உற்பத்தியை பேரளவில் இந்தியாவிற்கு மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு Apple தள்ளப்பட்டுள்ளது.
இதனால் அதிகரிக்கும் செலவுகளைக் குறைக்க, கைப்பேசிகளின் விலைகளை உயர்த்துவது ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரிதும் உதவும் என WS) கூறியது.
இந்த வரி விதிப்பால், இந்த ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் கூடுதலாக 900 மில்லியன் டாலர் வரை செலவுகள் இருக்கும் என Apple முன்னதாகவே கணித்திருக்கிறது.
இதனால், பெரும்பாலான Phone-களை இந்தியாவில் தயாரித்து அமெரிக்கச் சந்தைக்கு கொண்டு வர Apple திட்டமிடுகிறது.
Apple-லின் விலை உயர்வுத் திட்டம் அதன் சந்தைப் பங்கிற்கு பாதிப்பைக் கொடுக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இதற்கு காரணம், Samsung போன்ற அதன் எதிர் போட்டியாளர்கள் AI அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை ஈர்க்க முயலுகின்றனர். இந்நிலையில், iPhone-களின் விலை உயர்வு அதற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.


