சுக்காய், மே 13 - கடந்த 2020 தொடங்கி தற்போது வரை நாடு முழுவதிலும் சாலையில் வாகனங்கள் மோதி 2,361 வன விலங்குகள் உயிரிழந்துள்ளன.
மேலும், இக்காலக்கட்டத்தில், பகாங்கிலேயே அதிகமான அதாவது 765 விலங்குகள் விபத்தினால் உயிரிழந்ததாக இயற்கைவளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் தெரிவித்தார்.
அதோடு, பேராக்கில் 478, கிளந்தானில் 224, திரங்கானுவில் 201, நெகிரி செம்பிலானில் 187 விலங்குகள் உயிரிழந்துள்ளன.
"உதாரணத்திற்கு இதுவரை எட்டு யானைகள் பலியாகி உள்ளன. 2020-இல் ஒன்று, 2021 மற்றும் 2024-இல் தலா இரண்டு, இவ்வாண்டு இதுவரை மூன்று என தகவல் பதிவாகியுள்ளன.
சாலையில் யானைகள் உட்பட வனவிலங்குகள் இறப்பதைத் தடுக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், வன இருப்புப் பகுதிகளை அதிகரிக்க மாநில அரசு இந்த ஆண்டு ஒதுக்கீட்டை RM250 மில்லியனாக உயர்த்தியுள்ளதாகவும் நிக் நஸ்மி கூறினார்.
பெர்னாமா


