நியூயார்க், மே 13 - காஸா பகுதியில் தொடர்ந்து ஒன்பதாவது வாரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு வியோகத் தடையை முடிவுக்குக் கொண்டுவருமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இஸீரேலின் இந்த நடவடிக்கையால் 21 லட்சம் மக்களின் உயிர் கடுமையான ஆபத்தில் இருப்பதாக அது எச்சரித்தது.
காஸா மீதான விரிவான இஸ்ரேலிய முற்றுகை மூன்றாவது மாதமாகத் தொடர்வதால் மனிதாபிமான உதவிப் பொருட்கள் இப்போது கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டதை அந்த ஒருங்கிணைப்பு அலுவலம் உறுதிப்படுத்தியது.
இதற்கிடையில், இஸ்ரேலிய அதிகாரிகள் தடை விதித்த பின்னர் கடந்த மார்ச் 2 முதல் மனிதாபிமான உதவிகள் மற்றும் பொருட்கள் காஸாவிற்குள் நுழையவில்லை என்று பாலஸ்தீனத்தின் அருகிலுள்ள கிழக்கில் உள்ள அகதிகளுக்கான ஐ.நா. நிவாரணம் மற்றும் பணிகள் நிறுவனம் கூறியது.
இதன் காரணமாக உணவு, எரிபொருள், மருத்துவ உதவி மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் போன்ற அடிப்படை மனிதாபிமானப் பொருட்கள் குறைந்து வருகின்றன.
இந்த நிலைமை மக்களிடையே, குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய தரப்பினர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அந்நிறுவனம் தெரிவித்தது.
இஸ்ரேலின் தொடர்ச்சியான முற்றுகைகள் ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு மீளமுடியாத தீங்கினை விளைவிக்கும் என்றும் அது எச்சரித்தது.
உதவிப் பொருள்களை ஏற்றிய ஆயிரக்கணக்கான லோரிகள் இப்போது காஸாவிற்குள் நுழையத் தயாராக உள்ளன. மேலும் அனுமதிக்கப்பட்டவுடன் அதன் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அவை தயாராக உள்ளன.


