ஷா ஆலம், மே 12- வெளிநாட்டு வர்த்தக வளாகங்களுக்கு எதிராக சபாக் பெர்ணம் நகராண்மைக் கழகம் (எம்.டி.எஸ்.பி.) கடந்த வியாழக்கிழமை மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் 24 சம்மன்கள் வெளியிடப்பட்டு மூன்று வணிகப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெக்கான் சுங்கை பெசார், பாகான் சுங்கை பெசார் மற்றும் பாகான் நக்கோடா ஓமாரைச் சுற்றியுள்ள வணிக வளாகங்களில் மாலை 5.30 மணி முதல் அதிகாலை 1.00 மணி வரை இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக எம்.டி.எஸ்.பி. தனது முகநூல் பதிவில் கூறியது.
பொதுமக்களின் புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் அமலாக்கத் துறை, லைசென்ஸ் துறை மற்றும் மற்றும் சுற்றுச்சூழல் துறையைச் சேர்ந்த மொத்தம் 14 உறுப்பினர்கள் பங்கு கொண்டனர்.
சம்மன் விதிக்கப்பட்ட குற்றங்களில் உணவு வளாகத் தூய்மை, டைபாய்டு ஊசி போடுதல், வர்த்தக உரிமங்களை தவறாகப் பயன்படுத்தியது மற்றும் உரிமம் இடைநீக்க உத்தரவுகளை மீறியது ஆகியவையும் அடங்கும் என்று அது கூறியது.
வெளிநாட்டினர் யாரும் மாநிலத்தில் வணிகம் செய்வதைத் தடைசெய்யும் வகையில் சிலாங்கூர் அரசாங்கம் கடந்த 2020இல் 2007 ஆம் ஆண்டு அங்காடி வியாபார துணைச் சட்டங்களில் திருத்தங்களைச் செய்தது.
இந்தத் திருத்தத்தின் மூலம் வணிக உரிமங்களின் நிபந்தனைகள் குறித்து விவாதிக்கப்பதற்காக மாநில அரசு அனைத்து 12 ஊராட்சி மன்றங்களையும் உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்கியது


