ஷா ஆலம், மே 12- நாடு முழுவதும் குறிப்பாக, சிலாங்கூரில் உள்ள அனைத்து பௌத்த சமயத்தினருக்கும் மந்திரி புசார் விசாக தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
கௌதம புத்தரின் வாழ்க்கையை நினைவுகூரும் நாளாக பௌத்தர்கள் விசாக தினத்தைக் கொண்டாடுகிறார்கள் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த ஆண்டு விசாக தினம் மகிழ்ச்சியுடனும் நல்லிணக்கத்துடனும் கொண்டாடப்படும் அதேவேளையில் அனைத்து பண்டிகை மற்றும் வழிபாட்டு விழாக்களும் சுமூகமாக நடைபெறும் என்றும் நம்புகிறேன் என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
விசாக தினம் கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் மறைவைக் குறிக்கிறது. அவரைப் பின்பற்றுபவர்கள் பிரார்த்தனை செய்து புறாக்களை விடுவிட்டு ஏழைகளுக்கு உணவளித்து கொண்டாடுகிறார்கள் என்றார் அவரின் வாழ்த்து செய்தியில் .


