தாவாவ், மே 11 — மலேசியாவின் அரசு ஊழியர்கள் தொழில்முறை தகுதிகளுடன் விளங்க வேண்டும் மற்றும் சிறந்த தூதர்களாக ஒரு மூலோபாய பங்கு வகிக்க வேண்டும், குறிப்பாக இந்த ஆண்டு ஆசியான் தலைவராக நாடு மைய நிலைக்கு வரும்போது, என்று அரசாங்கத்தின் தலைமை செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபுபக்கர் கூறினார்.
ஆசியானின் மலேசியாவின் தலைமைத்துவம் அதன் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அதன் அரசாங்க சேவையின் திறன்களையும் வலுவான அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்ட வேண்டும் என்று அவர் கூறினார்.
“மடாணியின் மதிப்புகளைப் பிரதிபலிக்கும் திறமையான நிர்வாகம், பயனுள்ள தகவல் தொடர்பு மற்றும் பொது சேவை வழங்கல் மூலம் நாட்டின் நிலையை உயர்த்துவதில் நாம் ஒன்றுபடுவோம்,” என்று அவர் இன்று மடாணி ரக்யாட்: பெர் சமா-சமா கெட்டுவா சித்தியா உசாஹா நெகாரா நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
அரசாங்க ஊழியர்கள் வெறுமனே எதிர்வினையாற்று வர்களாக இருக்க கூடாது, மாறாக மிகவும் உறுதியான கொள்கைகளை உருவாக்குவதற்கும், வர்த்தக உத்திகள் வலுப்படுத்துவதற்கும், பொருளாதாரத்தை பன்முகப் படுத்துவதற்கான முயற்சிகளை விரிவுபடுத்துவதற்கும் ஒரு முன்னெச்சரிக்கை அணுகுமுறையை எடுக்க வேண்டும் என்று ஷம்சுல் அஸ்ரி அறிவுறுத்தினார்.
மலேசியாவின் நீண்ட கால பொருளாதார மீள் தன்மையை உறுதி செய்வதற்கும், உலகளாவிய கொள்கைகளும் நிச்சயமற்ற தன்மை களுக்கு எதிராக அதன் மக்களின் நல்வாழ்வை பாதுகாப்பதற்கும் இது மிகவும் முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு அரசு ஊழியரும் நேர்மையை நிலை நிறுத்த வேண்டும், உயர்மட்ட பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் மற்றும் எந்த ஒரு அதிகார துஷ்பிரயோகத்தை யும் எதிர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“2024 ஆம் ஆண்டில் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்ட ஊழல் உணர்வுகள் குறியீட்டின்படி, ஆசியான் நாடுகளில் சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக மலேசியா 50 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
“இருப்பினும், 2033 ஆம் ஆண்டுக்குள் உலகின் முதல் 25 நாடுகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற தேசிய தொலைநோக்குப் பார்வையை உணர அனைத்து மலேசியர்களும் ஒன்றினைந்து செயல்படுவது அவசியம். பொதுத்துறை நிர்வாகத்தில் பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை தொடர்ந்து மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே இதை அடைய முடியும்,” என்று அவர் கூறினார்.குறிப்பாக கொடி அல்லது 3Rs (இனம், மதம் மற்றும் அரச குடும்பத்தை) தொடும் எந்த ஒரு பிரச்சினை போன்ற தேசிய உணர்திறன் சார்ந்த விஷயங்களைக் கையாளும் போது, நாட்டின் பிம்பத்தைப் பாதுகாக்குமாறும் ஷம்சுல் அஸ்ரி அரசு ஊழியர்களை நினைவுபடுத்தினார்.
“அரசு ஊழியர்களாக, எங்கள் பங்கு கொள்கைகள் மற்றும் உத்தரவுகளை செயல்படுத்துவதை தாண்டியது. நாங்கள் நாட்டின் முதுகெலும்பாக வும், மலேசியா மடாணியின் விருப்பத்திற்கு பின்னால் உள்ள உந்து சக்தியாகவும் இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
நிகழ்வில் கலந்து கொண்ட 800க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், வெறும் வார்த்தைகளில் மட்டுமல்ல, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஒவ்வொரு செயலிலும், முடிவிலும், பொறுப்பிலும் விசுவாசத்தின் மதிப்பை நிலைநிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்


