ஷா ஆலம், மே 10- ஆங்கில மொழித் திறன் மற்றும் ஆளுமை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை உள்ளடக்கிய ஆறு மாத பயிற்சி வகுப்பு 16 ஏழ்மை நிலையிலுள்ளவர்களின் எதிர்காலத்தை மாற்றுகிறது.
இந்த பயிற்சியில் பங்கேற்ற 18 முதல் 30 வயதுடையவர்கள் உபசரணைச் சேவைத் துறையில் தொழில்முறை சான்றிதழைப் பெற்ற பிறகு இது சாத்தியமானதாக சிலாங்கூர் ஜக்கத் வாரியம் (LZS) தெரிவித்தது.
இந்த பயிற்சி மற்றும் பணித் திட்டத்தின் மூலம் ஆதரவற்றோர் வேலை உலகில் நுழைவதற்கு முன்பாக உபசரணை மேலாண்மை மற்றும் நடைமுறைப் பயிற்சியின் தொடக்க அனுபவத்தைப் பெற்றதாக அந்த வாரியம் கூறியது.
கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி உபசரணைச் சேவைகளில் தொழில்முறை சான்றிதழை வெற்றிகரமாகப் பெற்ற 16 ஏழைகளுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் முன் அலுவலக செயல்பாட்டு பிரிவு, நடவடிக்கை, உணவகம், சமையலறை, வீட்டு பராமரிப்பு, பயனுள்ள தகவல்


