கோலாலம்பூர், மே 10- இந்தோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் இன்று காலை 6.45 மணியளவில் 5.6 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் அம்போனுக்கு தெற்கே 413 கிலோ மீட்டர் தொலைவிலும் 171 கிலோமீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் மையமிட்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை அறிக்கை ஒன்றில் கூறியது.
இருப்பினும், இந்த பூகம்பத்தால் மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை.


