கோலாலம்பூர், மே 10- கெஅடிலான் ராக்யாட் கட்சியின் 2025 தேர்தலுக்கான
வேட்பு மனுத்தாக்கல் நேற்றிரவு 11.59 மணியுடன் முடிவுக்கு வந்த
வேளையில் கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுள்ளார்.
கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு நடப்பு துணைத் தலைவரும்
பொருளாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி மற்றும் நுருள்
இஸ்ஸா அன்வார் ஆகியோரிடையே நேரடிப் போட்டி நிலவுவதாக கட்சி
வட்டாரங்கள் கூறின.
கட்சியின் உதவித் தலைவர் பதவிக்கு மொத்தம் 12 பேர் தங்கள் வேட்பு
மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
உதவித் தலைவர் பதவிக்கான தேர்தலில் 2025-2028 தவணைக்கு
போட்டியிடும் 12 வேட்பாளர்களின் பெயர்கள் பின்வருமாறு-
- சாங் லீ காங் (அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை
அமைச்சர்)
- நிக் நஸ்மி நிக் அகமது (இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல்
நிலைத்தன்மை அமைச்சர்)
- டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ( சிலாங்கூர் மந்திரி பெசார்)
- டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் ( நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்)
- சிம் ட்ஸி ஜின் ( பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர்)
- ஆர்.யுவனேஸ்வரன் ( சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர்)
- டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் ( கெஅடிலன் உலு சிலாங்கூர்
தொகுதி தலைவர்


