கோலாலம்பூர், மே 10- ஜாலான் கிள்ளான் லாமாவில் உள்ள ஒரு உணவகம் ஒன்றின் பின்னால் உள்ள ஆற்றில் இன்னும் பாலினம் அடையாளம் காணப்படாத ஒரு குழந்தையின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையத்திற்கு நேற்று மாலை 3.00 மணியளவில் மெர்ஸ்999 அவசர அழைப்பு மூலம் தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து, சீபுத்தே தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஒரு தீயணைப்பு வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு மேல் நடவடிக்கைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கும் பணியை மேற்கொண்டனர் என்று கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இதற்கிடையே, அக்குழந்தையின் உடல் மீட்கப்படுவதற்கு முன்னர் அது ஆற்றில் அது மிதந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது என்று தீயணைப்புத் துறையின் நடவடிக்கை அதிகாரி சாஹ்ருடின் மாட் நூர் பெர்னாமாவிடம் கூறினார்.
முழுமையற்ற நிலையில் காணப்பட்டதால் குழந்தையின் பாலினத்தை
அடையாளம் காண முடியவில்லை என்று அவர் சொன்னார்


