சித்தியவான், மே 9 - பேராக், சித்தியவானில் அமைந்துள்ள `KFC` உணவகத்தில் வாகனம் மோதியதில் காயமுற்ற 73 வயது மூதாட்டி உயிரிழந்தார்.
நேற்றிரவு 9.05 மணியளவில் நிகழ்ந்த அந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட ஏழு வாடிக்கையாளர்கள் காயம் அடைந்தனர்.
காயமுற்ற மூதாட்டி ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனையின் அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததுள்ளார்.
அவர் நேற்றிரவு 11 மணி அளவில் இறந்து விட்டதை மஞ்சோங் மாவட்டக் காவல்துறை தலைவர் துணை கமிஷனர் ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
29 வயதான ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் அது KFC உணவகத்தினுள் மோதியுள்ளது.
இதில் அங்கிருந்த எட்டு வாடிக்கையாளர்கள் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த வாகன ஓட்டுனர் 1997ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின் 41 (1) கீழ் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்


