கோலாலம்பூர், மே 9 - கடந்த செவ்வாய்க்கிழமை, ஷா ஆலாம் அருகே உள்ள கேசாஸ் நெடுஞ்சாலையில், வேனில் இருந்து குதித்த பெண் மரணமடைந்தார்.
தன் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால், அப்பெண் வேனிலிருந்து குதித்திருப்பதாக நம்பப்படுவாதாகக் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்துள்ளார்.
தனது மனைவி சாலையில் குதித்த பிறகும் கூட அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடாமல் வேனை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பிய கணவர் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இதற்கிடையில் திருமணமாகி 20 ஆண்டுகளான அத்தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
மேலும், அந்நபரின் சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல், அவருக்கு ஒரு குற்றப்பதிவும் இரண்டு போதைப்பொருள் தொடர்பான குற்றப்பதிவுகளும் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இக்குற்றதிற்கான மேல் விசாரணை, தொடர்ந்து நடைபெற்று வருவதாக டத்தோ ருஸ்டி கூறியுள்ளார்.


