கோத்தா திங்கி, மே 9 - இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள இராணுவ கல்லூரிகளில் மலேசியாவைச் சேர்ந்த 21 ஆயுதப்படை அதிகாரிகளும் பணியாளர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பல்வேறு இராணுவ கல்லூரிகளில் 18 அதிகாரிகளும் மலேசிய இராணுவப் படை உறுப்பினர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும், மூவர் பாகிஸ்தானில் பயிற்சி பெறுவதாக, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமட் காலிட் நோர்டின் குறிப்பிட்டார்.
"தாக்குதல் நடைபெறும் பகுதிகளில் அவர்கள் ஈடுபடவில்லை. இவ்வாண்டில் அவர்களில் பெரும்பான்மையானவர்களின் பயிற்சி நிறைவடையும். எனவே, தற்போது அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால், நாங்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுப்படுவோம் என்றார் அவர்.
தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னதாக, இரண்டு தெற்காசிய நாடுகளின் தற்போதைய நிலைமைகளை அமைச்சு அவ்வப்போது தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பெர்னாமா


