கோலாலம்பூர், மே 9 - நடவடிக்கைப் பிரிவின் மத்திய மண்டல செயல்பாட்டுப் பிரிவு
கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி மற்றும் கடந்த செவ்வாய்க்கிழமை சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் மேற்கொண்ட இரண்டு ஓப் தாரிங் சோதனைகளில் கெத்தும் இலைகள் மற்றும் பானத்தைக் கடத்தி விநியோகம் செய்த சந்தேகத்தின் பேரில் எண்மரைக் கைது செய்தது.
இந்த சோதனையில் கெத்தும் இலைகள், கெத்தும் பானம், வாகனங்கள் மற்றும் அந்த
போதைப் பொருளை பதப்படுத்தி விநியோகிக்கப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பல்வேறு உபகரணங்களையும் தாங்கள் கைப்பற்றியதாக மத்திய படைப்பிரிவு தளபதி எஸ்ஏசி ஹக்கேமல் ஹவாரி ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு 657,400 என மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். பல்வேறு விவேக அணுகுமுறைகள் மூலம் குறிப்பாக சிலாங்கூர் கடலோர மற்றும் ஜோகூரின் மேற்கு கடற்கரையில் எல்லை தாண்டிய குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை மத்திய படைப்பிரிவு தொடர்ந்து தீவிரப்படுத்தும் என்று அவர் சொன்னார்.
சட்டவிரோதக் குடியேறிகளின் நுழைவை எதிர்த்து சிலாங்கூர் மற்றும் ஜோகூரில் செயல்படுத்தப்பட்ட ஒப் தாரிங் நியா 1 மற்றும் வரி விதிக்கப்படாத பொருட்களின் கடத்தல் மீது கவனம் செலுத்தும் ஒப் கொண்ட்ராபிராண்ட் நடவடிக்கை ஆகியவையும் இதில் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.
வனவிலங்குகள் மற்றும் தேசிய வளங்கள் தொடர்பான குற்றங்களைச் சமாளிக்க ஒருங்கிணைந்த கருவூல நடவடிக்கை மற்றும் சுற்றுச்சூழல் குற்றங்களில் கவனம் செலுத்தும் நடவடிக்கை ஆகியவற்றின் மீதும் நாங்கள் செயல்படுத்துகிறோம் என்று அவர் கூறினார்.
எல்லை தாண்டிய குற்றங்களை கையாள்வதில் ஒரு முழுமையான அணுகுமுறையாக இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மற்ற அமலாக்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் கூறினார்.
கடந்த ஜனவரி 1 முதல் இன்று வரை, சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மத்திய படைப்பிரிவு பொறுப்பு பகுதியில் 148 சோதனைகள் நடத்தப்பட்டதாக ஹக்கேமால் கூறினார்.
இந்நடவடிக்கைகளில் மொத்தம் 576 நபர்கள் கைது செய்யப்பட்டு 88.21 கோடி வெள்ளி
மதிப்புள்ள பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.


