கோலாலம்பூர், மே 9 — சமூக ஊடகங்களில் வெளியான இல்லாத முதலீட்டுத் திட்டத்தில் பங்கு கொண்ட முதியவர் ஒருவர் 50 லட்சத்து 20 வெள்ளியை இழந்தார்.
72 வயதான நிறுவன நிர்வாகி கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் விளம்பரம் ஒன்றினால் கவரப்பட்டு சந்தேக நபரை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டதாக சிலாங்கூர் துணை காவல்துறைத் தலைவர் டி.சி.பி. ஜைனி அபு ஹாசன் கூறினார்.
பின்னர் பாதிக்கப்பட்ட அந்நபர் வாட்ஸ்அப் குழுவில் சேர்க்கப்பட்டு ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்து புதிய முதலீட்டாளராகப் பதிவு செய்யும்படி பணிக்கப்பட்டார் என அவர் சொன்னார்.
அக்காலக்கட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர் பல்வேற் பரிவர்த்தனைகள் மூலம் நான்கு வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் 50 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி அனுப்பினார் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெற முயன்றபோது வரி நோக்கங்களுக்காக கூடுதல் பணம் செலுத்துமாறு சந்தேக நபர் நிர்பந்தித்தபோது தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட நபர் செர்டாங் போலீசில் புகார் அளித்தார்.
மோசடி தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.


