அமெரிக்கா, மே 8 - பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ஏவுகணைத் தாக்குதல்கள் இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுத மோதலாக மாறுவதைத் தடுக்க டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் அழுத்தம் கொடுத்து வருகிறது,
"நான் ஏதாவது உதவி செய்ய முடிந்தால், நான் அங்கே இருப்பேன்," என்று அவர் புதன்கிழமை கூறினார். "இரண்டு நாட்டையும் நான் நன்கு அறிவேன், மேலும் அவர்கள் இந்த சூழ்நிலையை சரிசெய்வதை நான் பார்க்க விரும்புகிறேன்."
"இந்தியா, பயங்கரவாத உள்கட்டமைப்பு" தளங்கள் என்று அழைக்கப்பட்ட இடங்களைத் தாக்கியதும், இஸ்லாமாபாத் இந்திய விமானங்களைச் சுட்டு வீழ்த்தி ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாகப் பாகிஸ்தான் உறுதியளித்ததும், இந்தியாவும் பாகிஸ்தானும் மிக மோசமான மோதலை எதிர்கொண்டுள்ளதை காட்டுகிறது.
அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, இரு நாடுகளுடனும் தொடர்பில் இருந்து வருகிறார். மேலும், மோதலை எவ்வாறு தணிப்பது என்பது குறித்து விவாதிக்க கடந்த புதன்கிழமை சவுதி அரேபிய வெளியுறவுச் செயலர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல்-சவுத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஏப்ரல் 22 அன்று காஷ்மீரில் உள்ள பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அமெரிக்கா கடுமையாகக் கண்டிகிறது.
ஆனால், தாக்குதலுக்குப் பிந்தைய நாட்களில், "பதட்டங்களைத் தணிக்கவும்" "தெற்காசியாவில் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிக்கவும்" இந்திய மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ரூபியோ வலியுறுத்தினார்.


