புத்ராஜெயா, மே 8 - தற்போது 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்துள்ளது. அனைவரும் அறிந்ததே. அதனால், அவ்விரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வது தொடர்பில் மலேசியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தானுக்கு சுற்றுலா உட்பட அவசிய/அவசரமற்ற பயணங்களை ஒத்தி வைக்குமாறு மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் குறிப்பாகப் பாகிஸ்தானை எல்லையாகக் கொண்ட மாநிலங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு, புது டில்லியில் உள்ள மலேசிய உயர் ஆணையர் கேட்டுக் கொண்டார்.
இரு நாடுகளிலும் வசிக்கும் மலேசியர்கள் அங்குள்ள மலேசிய உயர் ஆணையங்களில் பதிந்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் சுற்றுப் பயணிகளைக் குறி வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
அத்தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் 9 இடங்களைக் குறி வைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
மேலும், அதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தானியப் பிரதமரும் சூளுரைத்துள்ளார்.
இந்த சம்பவம் உலக நாடுகளில் கவலை மற்றும் பதற்றம் அடைய செய்துள்ளது.
அதனால், இப்போதைக்கு அந்த இரு நாடுகளுக்கான பயணங்களை தவிர்க்க மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்


