செக் குடியரசு, மே 8 -- செக் குடியரசில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரு பெட்டிகளைக் இரு மலையேறிகள் கண்டுபிடித்துள்ளனர்.
6.8 கிலோகிராம் எடைகொண்ட அவ்விரு பெட்டிகளும் சுவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அப்பெடிகளில் பொற்காசுகள், வளையல்கள் மற்றும் சிகரெட் பெட்டிகள் போன்றவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
அந்த பொற்காசுகளின் மதிப்பு சுமார் 341,000 டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பொருட்கள் மஞ்சள் உலோகத்தால் செய்யப்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அப்பொருட்களை பகுப்பாய்வு செய்து, அவை எந்த மஞ்சள் உலோகத்தால் ஆனவை என்பதை அடையாளம் காண முயற்சிகள் நடந்து வருகின்றன.
பண்டைய காலங்களில் விலை மதிப்புக் கொண்ட பொருட்களைப் புதைத்து வைப்பது வழக்கமான ஒன்று ஆனால், அவற்றை இக்காலத்தில் கண்டுப்பிடிப்பது அரிது என்று அந்நாட்டின் அருங்காட்சியகத்தின் தொல்லியல் துறையின் தலைவர் கூறினார்.
--பெர்னாமா


