புத்ராஜெயா, மே 7 - இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானின் லாகூர் மற்றும் இந்தியாவின் அமிர்தசரஸ் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்களை இன்றும் நாளையும் ரத்து செய்வதாக பாத்தேக் ஏர் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட விமானச் சேவைகள் பின்வருமாறு:
லாகூர் (LHE)
– KUL-LHE (OD 131), 7 மற்றும் 8 மே. புறப்படும் நேரம் மாலை 5.35
– LHE-KUL (OD 132), மே 7 மற்றும் 8, புறப்படும் நேரம் இரவு 9.35 மணி
அமிர்தசரஸ் (ATQ)
– KUL-ATQ (OD 271), மே 7, புறப்படும் நேரம் மாலை 6.40
– ATQ-KUL (OD 272), மே 7, புறப்படும் நேரம் இரவு 11.05
பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு தங்களின் உயரிய முன்னுரிமையாக உள்ளது என்று பாத்தேக் ஏர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியது.
பத்தேக ஏர் நிறுவனம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நிலைமையை அணுக்கமாக கண்காணித்து வருகிறது. புதிய தகவல்கள் கிடைத்தவுடன் சமீபத்திய நிலவரங்களை அது வழங்கும். பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் புரிதலுக்கு நன்றி என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான பதற்ற நிலை கடந்த மாதத்திலிருந்து அதிகரித்து வருகிறது. புதன்கிழமை அதிகாலையில் இரு தரப்பினரும் எல்லை தாண்டிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
காஷ்மீர் பகுதியைப் பிரிக்கும் கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்திய மற்றும் பாகிஸ்தான் துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


