இவ்விரு நாடுகளும், உலக நாடுகளின் அரிசி தேவையைக் கிட்டத்தட்ட 30 விழுக்காடு பூர்த்தி செய்து வருகின்றன. அதோடு மட்டுமில்லாம்ல், மலேசியா, அரிசித் தேவையைச் சுமார் 38 விழுக்காடு பூர்த்தி செய்கின்றன.
இச்சமயத்தில் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள மோதல், அரிசி விநியோகத்தில் குறிப்பாக அதன் விலையில் ஏற்றம் காணச் செய்யலாம். இதனால் உள்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் என்றும் முகம்ட் சாபு குறிப்பிட்டார்.
மலேசியாவில் தற்போது, அரிசி விநியோகம் சீராக இருந்தாலும் எதிர்காலத்தில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றார்.
ஆகையால், வியட்நாம், தாய்லாந்து மற்றும் கம்போடியா போன்ற பிற ஏற்றுமதி நாடுகளுடன் மலேசிய அரசாங்கம் தற்போது உறவுகளை வலுப்படுத்தி வருவதாக அவர் மேலும் விளக்கினார்.


