ஷா ஆலம், மே 7: எதிர்வரும் சனிக்கிழமை ஜாலான் ஹிலிர் 7 அம்பாங்கில் உள்ள அங்சானா ஹிலிர் சமூக மண்டபத்தில் மறுசுழற்சி (Trash To Cash) திட்டத்தை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அருகிலுள்ள குடியிருப்பாளர்களை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் முகநூல் வழியாக அழைப்பு விடுத்துள்ளது.
“இந்தத் திட்டம் எதிர்காலத்தில் மாசுபாட்டைத் தடுப்பதையும், சமூகத்தினரிடையே மறுசுழற்சி நடைமுறைகளைத் தொடர்ந்து ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
“மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களுடன் வரும் நபர்களுக்கு பொருட்களின் வகையைப் பொறுத்து பணம் வழங்கப்படும்,” என தெரிவிக்கப்பட்டது.
பின்வருபவை மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள்:
1. பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் (RM2/கிலோ)
2. மின் / மின்னணு கழிவுகள் (RM0.20/கிலோ)
3.அலுமினிய கேன்கள் (RM1/கிலோ), பெட்டிகள், காகிதம், பிளாஸ்டிக் (RM0.20/கிலோ) மற்றும் இரும்பு (RM0.40/கிலோ)
கூடுதல் தகவல்களுக்கு 03-42857390 மூலம் அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தின் மறுசுழற்சி பிரிவைத் தொடர்பு கொள்ளலாம்.


