புத்ராஜெயா, மே 7 — வாட்ஸ்அப்பில் பரவும் 2025 சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா (SARA) உதவி தொடர்பான செய்திகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
‘பந்துவான் சும்பங்கன் அசாஸ் ரஹ்மா (SARA) 2025 RM200’ என்ற தலைப்பில் உள்ள இணைப்பு போலியானது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“கவனமாக இருங்கள், சமூக ஊடகங்களில் இதுபோன்ற போலி செய்திகளால் எளிதில் ஏமாற வேண்டாம்.
“அதிகாரப்பூர்வத் தளங்களை பின்தொடர்ந்து இணைப்புகள் முறையானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை, மாதத்திற்கு RM100 பெறும் சாரா உதவி பெறுநர்களின் MyKadஇல் வரவு வைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 முதல், நாடு முழுவதும் 1,600க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் உணவு, பானங்கள், மருந்து, பள்ளி பொருட்கள் மற்றும் தனிப்பட்ட சுகாதாரப் பொருட்களை வாங்குவதற்கான தொகை மாதத்திற்கு RM200ஆக அதிகரிக்கப்பட்டது.
— பெர்னாமா


