கோத்தா கினபாலு, மே 7- சபாவில் இன்று காலை நிலவரப்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 204 குடும்பங்களைச் சேர்ந்த 647 பேர் நான்கு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
103 குடும்பங்களைச் சேர்ந்த 325 பேரா சூக் மாவட்டத்தில் உள்ள இரண்டு தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சபா மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் ஓர் அறிக்கையில் கூறியது.
அவர்களில் 208 பேர் கெனிங்காவ் பெக்கான் 2 தேசிய பள்ளி மண்டபத்திலும் 117 பேர் கம்போங் அன்சிப் தெங்கா மண்டபத்திலும் தங்கியுள்ளனர்.
பியூபோர்ட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 88 குடும்பங்களைச் சேர்ந்த 287 பேர் செலகான் நிரந்தர நிவாரண மையத்தில் அடைக்கலம் நாடியுள்ளனர். மேலும், பிரிமா வூர்போர்ட் தோட்ட குடியிருப்பு மண்டபத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சூக் மாவட்டத்தில் ஒன்பது கிராமங்கள், பியூபோர்ட்டில் 10 கிராமங்கள் உட்பட மொத்தம் 19 கிராமங்கள் இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


