கோலாலம்பூர், மே 6 - கடந்தாண்டு நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் அதிகம் சிக்கிய வாகனங்களாக Peroduva Myviயும் மற்றும் Yamaha 135LC மோட்டார் சைக்கிளும் விளங்குகின்றன.
மேலும், விபத்துகளில் அதிகம் சிக்கும் முதல் 10 கார்களின் பட்டியலில் Myvi கார்களே மீண்டும் முதலிடம் வகிக்கின்றன.
காப்புறுதி பாதுகாப்புத் தொழில்துறையின் புள்ளி விவரப்படி, Perodua Myvi கார்களை உட்படுத்தி 24,628 காப்புறுதிக் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
அதற்கு அடுத்த நிலையில் 16,159 கோரிக்கைகளுடன் Proton Saga, 13,388 கோரிக்கைகளுடன் Honda City கார்களும் உள்ளன.
அதே வேளையில், விபத்துகளில் அடிக்கடி சிக்கும் மோட்டார் சைக்கிள் இரகங்களில், சுமார் 3,000 காப்புறுதிக் கோரிக்கைகளுடன் Yamaha 135LC முதலிடம் வகிக்கிறது. 2,154 கோரிக்கைகளுடன் Yamaha Y15ZR அடுத்த இடத்தில் உள்ளது.
2024-ல் மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துகளில் இந்த இரு இரகங்கள் மட்டுமே 30 விழுக்காட்டை உட்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


