நியூ யோர்க், மே 6 - சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் புதியப் புரட்சியை ஏற்படுத்திய, இணையம் மூலம் தொலைப்பேசி மற்றும் விடியோ அழைப்புச் சேவையான `Skype` மே 5-ஆம் தேதியோடு மூடப்பட்டுள்ளது.
மைக்ரோசோஃப்ட் நிறுவனம் ஏற்கனவே அறிவித்த படி, இன்று முதல் அது பயன்பாட்டில் இருக்காது.
மேலும், Skypeயை, 8.5 பில்லியன் டாலரை ரொக்கமாகக் கொடுத்து வாங்கிய 14 ஆண்டுகளுக்குப் பிறகு மைக்ரோசோஃப்ட் அதனை மூடுகிறது.
இதற்கிடையில் பயனர்கள் தங்களின் பல்வேறு தரவுகளை Microsoft Teamsக்கு மாற்ற 10 வாரக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Skype சேவை முடிவுக்கு வந்துள்ளதால், Microsoft Teams செயலியில் இனி அந்நிறுவனம் முழு கவனம் செலுத்த எண்ணம் கொண்டுள்ளது.


