நிபோங் திபால், மே 6 - இணைய மோசடி கும்பலால் 489,550 ரிங்கிட் பணத்தை 39 வயதான பெண் ஊழியர் ஒருவர் இழந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம், அப்பெண்ணுக்கு காவல் துறை அதிகாரி பேசுவது போல் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாக தெற்கு செபராங் பிறை மாவட்ட காவல்துறைத் தலைவர் ஜே ஜனவரி சியோவோ கூறினார்.
அந்த அழைப்பில் சம்பந்தப்பட்ட அப்பெண், குற்றவழக்கில் ஈடுப்பட்டிருப்பதாகவும், அவருக்கு எதிரான விசாரணையை முடிக்க பணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து யாரிடமும் பகிர கூடாது என்றும் அந்த மோசடி கும்பல் மிரட்டியுள்ளது.
இதனால் பதற்றம்ம் அடைந்த அப்பெண், வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குச் சுமார் 489,550 ரிங்கிட் பணத்தை செலுத்தியுள்ளார். பிறகு தன் தம்பியின் ஆலோசனையின் படி, சுங்கை பகாப் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் இத்தகைய மோசடி கும்பலிடம் சிக்காமல், விழிப்புடண் இருக்க வேண்டும் என்றும் சியோவோ கூறினார்


