சபா, மே 6 - நேற்று கோத்தா பெலூட் சபாவிலுள்ள கம்போங் ரம்பாயன் உலுவில் கோழி பண்ணை, தீ விபத்தில் 20,000 கோழிகள் பலியாகின.
நண்பகல் 12.30 மணி அளவில் இச்சம்பவம் தொடர்பான தவகல் அறிந்த உடனேயே, பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று, சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கோத்தா பெலூட் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் எல்கி பாகுக் கூறினார்.
மேலும் தீயணைப்பு நடவடிக்கைகள், பிற்பகல் 2 மணி அளவில் முடிவடைந்ததாக அவர் தெரிவித்தார். இதில் 95 விழுக்காடு கோழிப்பண்ணைத் தீயில் கருகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, இச்சம்பவத்திற்கான காரணங்கள் மற்றும் இழப்புகள் குறித்து, விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.


