NATIONAL

இரண்டாம் படிவ மாணவர் பகடிவதையால் பாதிப்பு - காவல்துறை விசாரணை

6 மே 2025, 3:16 AM
இரண்டாம் படிவ மாணவர் பகடிவதையால் பாதிப்பு - காவல்துறை விசாரணை

கோலாலம்பூர், மே 6: கடந்த மாதம் முதல் USJ 4இல் உள்ள பள்ளி ஒன்றில் இரண்டாம் படிவ மாணவர் ஒருவர் பகடிவதைக்கு ஆளான குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தனது மகனுக்கு பலமுறை நடந்ததை அறிந்ததை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரின் 43 வயது தந்தையிடமிருந்து கடந்த வெள்ளிக்கிழமை காவல்துறைக்கு புகார் கிடைத்ததாக சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மமட் கூறினார்.

அதே நாள் பிற்பகல் 2.30 மணி அளவில் பள்ளியில் ஒரு மாணவரால் தாக்கப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட மாணவர் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

"மேலும், கடந்த செவ்வாய்க்கிழமை, பாதிக்கப்பட்டவர் வகுப்பில் இருந்தபோது, ஒரு மாணவர் வந்து அவரது முகத்தில் குத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 323 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.