கோல கிராய், மே 5 - இங்கு கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட இரண்டு பூர்வக்குடி சகோதரர்கள் இன்று இரண்டு வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இருவான் ரந்தாவ் (வயது 18) என்பவரின் உடல் இன்று காலை 8.50 மணிக்கு மாச்சாங், பெங்காலான் பாசீர், பாலோ ராவாவில் கண்டுபிடிக்கப்பட்ட வேளையில்
ராஹிடி ரந்தாவ் (வயது16) என்பவரின் உடல் பெங்கலன் பாசிர், புக்கிட் பனாவ், தானா மேராவில் காலை 10.00 மணியளவில் மீட்கப்பட்டது என்று சுங்கை டுரியன் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் ஜூல்ஹில்மி பஹாருடின் கூறினார்.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் இருவானின் உடலை கிராம மக்கள் கண்டுபிடித்த வேளையில் ராஹிடியின் உடல் 35 கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
முந்தைய இரவு பெய்த கன மழை மற்றும் ஆற்றின் பலத்த நீரோட்டம் காரணமாக அவர்களின் உடல் காணாமல் போன இடத்திலிருந்து வெகு தொலைவில் மீடக்கப்பட்டது
என அவர் சொன்னார்.
அவ்விருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மச்சாங் மருத்துவமனை மற்றும் தானா மேரா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது என்று அவர் கூறினார்.


