பேங்காக், மே 5 - இவ்வாண்டு கோலாலம்பூருக்கும் பேங்காக்கிற்குமிடையே மீண்டும் நேரடி ரயில் சேவையை தொடங்கும் நோக்கத்தை மலேசியாவும் தாய்லாந்தும் கொண்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
பேங்காக் - பாடாங் பெசார் பட்டர்வெர்த் கோலாலம்பூரை இணைக்கும் ரயில் தண்டவாளம் ஏற்கனவே இருந்து வருவதால் இந்த நேரடி ரயில் சேவையை உடனடியாக தொடர முடியும் என அவர் கூறினார்.
கோலாலம்பூர் - பேங்காக்கிற்கான ரயில் சேவையை தொடங்குவதற்கு முன்கூட்டியே தயாராகுவதற்காக KTM எனப்படும் கெரேதாபி தானா மெலாயுவிற்கும் `State Railway` தாய்லாந்திற்கும் மூன்று மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு புதிய ரயில் தண்டவாளம் தேவையில்லை. எனினும், இரு நாடுகளும் இணைந்து கூட்டாக ஒருங்கிணைப்பு, சந்தை மற்றும் டிக்கெட் விற்பனை ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என தாய்லாந்திற்கான தனது ஒரு நாள் பயணத்தின் போது அந்தோணி லோக் தெரிவித்தார்.


