கோலாலம்பூர், மே 5 - ஏப்ரல் 9ஆம் தேதி புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையிடம் வாக்குமூலம் அளிக்கச் செல்லும் வழியில், பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
அன்றைய தினம் பிற்பகல் 3 மணியிலிருந்து அவரைக் காணவில்லை என புகார் கிடைத்திருப்பதை, கோலாலம்பூர் காவல்துறை தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா உறுதிப்படுத்தினார்.
ஏற்கனவே சில முறை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையிடம் வாக்குமூலம் அளித்துள்ள 42 வயதான அப்பெண், ஏப்ரல் 9-ஆம் தேதி வராவில்லை என எம்ஏசிசி உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து, எம்ஏசிசி அதிகாரிகள், காணாமல் போன பெண்ணின் வழக்கறிஞர் உள்ளிட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
அவற்றின் துணையோடு அப்பெண்ணைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக டத்தோ ருஸ்டி கூறினார்.


