சிப்பாங், மே 5 - மலேசியாவிற்கு நான்கு நாள்கள் அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொண்டிருந்த கொசொவோ அதிபர் டாக்டர் வியொசா ஒஸ்மானி செட்ரியு நேற்று தாயகம் திரும்பினார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.ஏ-வின் பூங்கா ராயா வளாகத்தில் டாக்டர் வியொசா ஓஸ்மானியை வழியனுப்பி வைப்பதற்கு அரச மலேசிய இராணுவப் படையின் முதலாவது பெட்டலியனின் மரியாதை அணிவகுப்பு நடைபெற்றது.
2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி அதிபராகப் பதவியேற்ற பிறகு, ஒஸ்மானி கடந்த வியாழக்கிழமை மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார்.
மேலும், மலேசியாவுடன் அரசதந்திர, பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த கொசொவோ தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதோடு, அந்நாட்டிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் கோலாலம்பூரில் கொசொவோ தூதரகத்தைத் திறக்கும் நடவடிக்கை முக்கியமாகக் கருதப்படுகிறது.
--பெர்னாமா


