NATIONAL

உள்ளூர் கலைத்துறையினருக்கு மடாணி அரசாங்கம் ஆதரவளிக்கும்

5 மே 2025, 2:10 AM
உள்ளூர் கலைத்துறையினருக்கு மடாணி அரசாங்கம் ஆதரவளிக்கும்

புத்ராஜெயா, மே 5 - இந்நாட்டின் கலைத்துறையைச் சார்ந்தவர்கள் சிறந்த மற்றும் தரமான படைப்புகளை உருவாக்குவதற்கு மடாணி அரசாங்கம் அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்க முயற்சிகளை மேற்கொள்ளும்.

புத்ராஜெயாவில், கலைஞர் டத்தோ எம்.நசீர் உடனான சந்திப்பின் போது நடந்த பேச்சு வார்த்தையில் அரசாங்கத்தின் உறுதிப்பாடு தொடர்பில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் படைப்புகள், கலைகள் மற்றும் கலாச்சாரம் குறித்து விவாதிக்க டத்தோ எம்.நசீர் உடனான சந்திப்பை டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும், நாட்டின் இசைத் துறையில் தொடர்ந்து பணியாற்றுமாறு நசீரிடம் பிரதமர் தமது விருப்பத்தை முன் வைத்தார்.

பாடகர் மற்றும் இசையமைப்பாளராக மட்டுமின்றி, நடிகர், பாடலாசிரியர் மற்றும் கலை இயக்குநராக அனுபவம் பெற்றிருக்கும் நசீர், உள்ளூர் பொழுதுபோக்கு உலகில் கலாச்சாரத்தை வலுப்படுத்துவதில் பெரிதும் பங்களித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.