கோலாலம்பூர், மே 5 - கடந்த ஆண்டு உலக ஊடக சுதந்திர குறியீட்டில் 107-வது இடத்தை பிடித்திருந்த மலேசியா. 2025-ஆம் ஆண்டு 19 இடங்கள் முன்னேறி 88-வது இடத்தைப் பிடித்துள்ளது.
REPORTERS WITHOUT BORDERS, RSF மேற்கொண்ட அண்மைய மதிப்பீட்டின்படி 2024-ஆம் ஆண்டில் மலேசியா பெற்றிருந்த 52.07 புள்ளிகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 56.09 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.
ஆசியான் நாடுகளுடன் ஒப்பிடும் போது, மலேசியாவை விட மூன்று இடங்கள் முன்னேறி தாய்லாந்து 85-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், புருணை 97-வது இடத்திலும், பிலிப்பைன்ஸ் 116-வது இடத்திலும், சிங்கப்பூர் 123-வது இடத்திலும், இந்தோனேசியா 127-வது இடத்திலும் உள்ளன.
அரசியல் சூழல், சட்டப் பாதுகாப்பு, தலையங்க சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்களின் அடிப்படையில் 180 நாடுகளில் ஊடக சுதந்திரத்தின் அளவை உலக ஊடக சுதந்திரக் குறியீடு மதிப்பிடு செய்யப்படுகிறது.
பெர்னாமா


