NATIONAL

போலி முதலீட்டுக்  கும்பலிடம் நிறுவன நிர்வாகி வெ.18 லட்சம் பறிகொடுத்தார்

4 மே 2025, 10:41 AM
போலி முதலீட்டுக்  கும்பலிடம் நிறுவன நிர்வாகி வெ.18 லட்சம் பறிகொடுத்தார்

ஜோகூர் பாரு, மே 4- போலி இணைய  முதலீட்டுத் திட்டத்தில் பங்கேற்ற   நிறுவன நிர்வாகி ஒருவர் 18 லட்சம் வெள்ளியை இழந்தார்.

66 வயதான  அந்த உள்ளூர் நபர்   சமூக ஊடகங்களில் வெளிவந்த  குறுகிய காலத்தில் அதிக வருமானத்தை வழங்கும் முதலீட்டு திடடம் தொடர்பான விளம்பரத்தைக் கண்டதாக

ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ எம் குமார் கூறினார்.

அந்த விளம்பரத்தால் ஈர்க்கப்பட்ட பாதிக்கப்பட்ட நபர்  கூடுதல் தகவல்களைப் பெறும் நோக்கில் வழங்கப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்ததுள்ளார். மூன்று மாத காலத்திற்குள்  செய்யப்பட்ட மொத்த முதலீட்டில் 200 சதவீத லாபம் வழங்கப்படும் என அவரிடம் கூறப்பட்டுள்ளது குமார் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் கடந்த  2024ஆம் ஆண்டு நவம்பர் முதல் கடந்த ஜனவரி வரை பல வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் 18 லட்சம் வெள்ளியை  அனுப்பியுள்ளார்.

கூடுதலாக சந்தேக நபரின் அறிவுறுத்தலின்படி ஒரு செயலியைப்  பதிவிறக்கம் செய்து தனது முதலீடுகளைக் கண்காணிக்க  ஒரு கணக்கையும் அவர் பதிவு செய்துள்ளார்

இருப்பினும், இன்றுவரை பாதிக்கப்பட்டவருக்கு அந்த  முதலீட்டில் எந்த வருமானமும் கிடைக்கவில்லை என்பதோடு சந்தேக நபர் பல்வேறு சாக்குப்போக்குகளை கூறி லாபத் தொகையை வழங்குவதைத் தவிர்த்துள்ளார். அதன் பின்னரே தாம் ஏமாற்றப்பட்டது பாதிக்கப்பட்டவர் உணர்ந்துள்ளார்  என்று அவர் நேற்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் பின்னர் போலீசில் புகார் அளித்ததாகவும் இந்த மோசடியினால் அவருக்கு  ஏற்பட்ட இழப்பு 18 லட்சம் வெள்ளி என மதிப்பிடப்பட்டதாகவும் குமார் கூறினார்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின்  420வது  பிரிவின் விசாரிக்கப்படுகிறது.குற்றம் நிரூபிக்கப்பட்டால்  அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை செய்கிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.