கோலாலம்பூர், மே 4 - உற்சாகம் நிறைந்த பிரச்சாரத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாகப் பதவியேற்ற ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேர்தல் இரவில் விரைவாக அறிவிக்கப்பட்ட இந்த முடிவு, ஏராளமான விஷயங்களை உள்ளடக்கியிருந்ததோடு ஆஸ்திரேலியர்களிடமிருந்து தெளிவான தீர்ப்பையும் வழங்கியது என்று அன்வார் தனது முகநூல் பதிவில் பதிவில் கூறினார்.
ஆசியா-பசிபிக் (பிராந்தியத்தில்) ஆஸ்திரேலியா முக்கிய பங்கு வகிக்கிறது. பிரதமர் அல்பானீஸ் அரசாங்கம் முதல் பதவிக் காலத்தில் தென்கிழக்கு ஆசியாவின் மீது காட்டிய கவனம் கவனிக்கப்படாமல் போகவில்லை. மேலும் அந்த ஈடுபாட்டு உணர்வு தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம்.
நமது பிராந்தியம் புதிய சோதனைகள் மற்றும் மாற்றங்களை எதிர்கொள்வதால் நிலைத்தன்மையை நிலைநிறுத்தவும், மீள்தன்மையை மேம்படுத்தவும், பகிரப்பட்ட செழிப்புடன் கூடிய எதிர்காலத்தை வடிவமைக்கவும் ஒன்றிணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர் கூறினார்.
ஆஸ்திரேலியாவின் கூட்டரசுத் தேர்தலில் பிரதமர் அந்தோணி அல்பானீஸின் இடது சாரிதொழிலாளர் கட்சி இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது.
48வது நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் 150 இடங்களில் தொழிற்கட்சி தெளிவான பெரும்பான்மையை பெறும் என்று ஏபிசி செய்தி நிறுவனம் நேற்று கணித்தது.
இது 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ச்சியாக தேர்தல்களில் வெற்றி பெற்ற பெரிய கட்சியின் முதல் தலைவராக அல்பானீஸ் விளங்குகிறார்.


