ANTARABANGSA

சிங்கை தேர்தல்- மக்கள் செயல் கட்சி வெற்றி- மூன்றில் இருமடங்கு பெரும்பான்மையைப் பெற்றது

4 மே 2025, 6:28 AM
சிங்கை தேர்தல்- மக்கள் செயல் கட்சி வெற்றி- மூன்றில் இருமடங்கு பெரும்பான்மையைப் பெற்றது

சிங்கப்பூர், மே 4- சிங்கப்பூரில் நடைபெற்ற 2025 பொதுத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல்கட்சி (பிஏபி) மூன்றில் இரு மடங்கிற்கும் அதிகமான பெரும்பான்மையைப் பெற்று வாகை சூடியது. மொத்தம் உள்ள 97 நாடாளுமன்றத் தொகுதிகளில் 87 இடங்களை அக்கட்சி கைப்பற்றியது.

ஒவ்வொரு தொகுதியின் முடிவுகளையும் தேர்தல் அதிகாரி ஹான் கோக் ஜூவான் அறிவித்தார். இந்நிகழ்வு அந்நாட்டு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. தேர்தல் இலாகாவின் அகப்பக்கம் வாயிலாகவும் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.

மொத்தம் 65.57 விழுக்காட்டு மக்கள் செல்வாக்கு வாக்குகளுடன் பி.ஏ.பி. கட்சி மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. கடந்த 2020 தேர்தல் முடிவுகளைக் காட்டிலும் இது நான்கு விழுக்காட்டிற்கும் மேல் அதிகமாகும்.

வேட்பு மனுத் தாக்கல் தினத்தன்று ஐந்து மெரின் பரோட்-பரெடல் ஹைட்ஸ்  குழு பிரதிநிதித்துவ தொகுதிகளில் பி.ஏ.பி. கட்சி  போட்டியின்றி வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியானது முதன் முறையாக தேர்தலை எதிர்கொண்ட சிங்கப்பூரின் இடைக்காலப் பிரதமரும் பி.ஏ.பி. கட்சியின் தலைமைச் செயலாளருமான லோரன்ஸ் வோங்கிற்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாட்டை வழிநடத்தக்கூடிய அதிகாரத்தை வழங்கியுள்ளது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லோரன்ஸ், தமக்கு வழங்கப்பட்ட இந்த அதிகாரம் குறித்து மகிழ்ச்சியடைவதோடு நன்றியும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். யாருக்கு வாக்களித்தார்கள் என்ற பேதம் பார்க்காமல் அனைத்து மக்களுக்காவும் தாம் உளப்பூர்வமாகவும் முழு கடப்பாட்டுடனும் பாடுபடவுள்ளதாக அவர் உறுதியளித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.