MEDIA STATEMENT

நெல் உற்பத்தியை அதிகரிக்க சிலாங்கூருக்கு 100 கோடி வெள்ளி தேவை

4 மே 2025, 5:29 AM
நெல் உற்பத்தியை அதிகரிக்க சிலாங்கூருக்கு 100 கோடி வெள்ளி தேவை

சபாக் பெர்ணம், மே 4-  நெல் உற்பத்தியை அதிகரிக்க சிலாங்கூருக்கு குறைந்தபட்சம் 100 கோடி வெள்ளி தேவை என்று உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத் துறைக்கான   ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் கூறினார்.

இரண்டு வருடங்களுக்கும் ஐந்து முறை நெல் நடவு  இலக்கை அடைவதற்காக வடமேற்கு சிலாங்கூர் ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டுப் பகுதி (ஐஏடிஏ) மூலம் நிதியுதவி பெறுவது குறித்து விவாதிக்க மாநில அரசு விரைவில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்.

வடிகால் அமைப்புகளை மேம்படுத்துதல், நீர் தேக்கக் குளங்களைக் கட்டுதல் மற்றும் தஞ்சோங் காராங் முதல் சபாக் பெர்ணம் வரை 80.9 ஹெக்டேர் நெல் வயல்களைக் கையகப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இந்த நிதி பயன்படும்.

சபாக் பெர்ணமிற்கு தண்ணீர் கொண்டு வருவதில் நாங்கள் சிக்கல்களை எதிர்கொள்கிறோம். எனவே வடமேற்கு சிலாங்கூரில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் நீர் வளத்தை அதிகரிக்க விரும்புகிறோம். இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு ஐந்து நடவு சுழற்சிகளுக்கு போதுமான நீர் விநியோகம் இருக்கும் என்று அவர் கூறினார்.

சுங்கை லெமானில் நேற்று நடைபெற்ற விவசாயிகளின் பாராட்டு விழா மற்றும் டேவான் ஶ்ரீ செகிஞ்சானில் நடைபெற்ற  பிரையர் & பென் மேயர் நிறுவனத்தின்  பேஸ் ரக உர தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வுக்குப் பின்  செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

சிலாங்கூரில் நெல் சாகுபடிக்கு புதிய நிலம் இல்லாததால்   தற்போதைய திட்டங்களின் கீழ் மேம்படுத்துதல் முன்னெடுப்புகளுக்கு  அளிக்கப்படும் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஒதுக்கீடுகளுக்கு  அங்கீகாரம் அளித்தால் அனைத்து உள்கட்டமைப்பு மேம்பாடுகளையும் மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஏழு டன் நெல் உற்பத்தியைப்  பெறும் விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 100 வெள்ளி ஊக்கத்தொகையை அளிக்க நாங்கள் முன்மொழிந்துள்ளோம் என்று இஷாம் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.